"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Friday, December 3, 2010

ஜப்பானியர் தயாரித்த ஓர் அதிசய Robot

ஜப்பானில் நாளுக்கு நாள் புதிய புதிய Robot களை உருவாக்கி வருகின்றனர். இன்று பார்க்க போவதும் ஜப்பானியர் தயாரித்த ஓர் அதிசய Robot ஜ பற்றியதாகும். மற்றய ரோபோட்களுக்கு நடக்க , பாட, கதைக்க தெரியும் இந்த ரோபோட் இன் விஷேடம் அவற்றில் ஒன்றுமே இல்லை , இதற்கு strawberries பழங்களை பறிக்க தெரியும். 
என்னடா பழம் பறிக்கின்ற Robot தயாரித்தல் சின்ன ஒரு விஷயம் தானே.... என்று யோசிக்கிரிங்களா? அப்படி என்னதான் சிறப்பு அதில் இருக்கிறது என்று தான் பார்போமே....
 

பொதுவாகவே இதன் தோற்றம் மனிதனை போன்றதல்ல, இது advanced robots களில் ஒன்றாகும். மனிதனுக்கு உதவி செய்து நம் வேலைகளை இலகுவாக்கி கொள்ள உதவுகின்றது. விவசாயத்தில் இந்த வகை ரோபோட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகிலேயே ஸ்ரோபரி பழம் பறித்த முதல் ரோபோட் இதுவேயாகும். பழங்களை பறிக்கும் போது அவற்றிற்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பறிப்பது இதன் ஓர் சிறப்பியல்பாகும்.

 
இதில் பொருத்தப்பட்டுள்ள இரு Cameras களின் உதவியுடன் 80% ற்கு மேல் சிவப்பான பழுத்த பழங்களை பறிப்பதுடன் ஒரு பழத்தை பறிக்க 09 செக்கன்கள் மட்டுமே செலவிடுகின்றது. 1,000sqm பரப்பில் ஸ்ரோபரி பழங்களை மனிதர்கள் பறிப்பதாயின் 500 மணித்தியாலங்கள் செல்கின்றன ஆனால் இந்த ரோபோட் 300 மணித்தியாலங்களில் எதுவித பழுதுகளும் ஏற்படாமல் பறுத்து விடுகிறது  என்பதே இதன் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். 

No comments:

Post a Comment