"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Wednesday, September 14, 2011

512MB RAMயை விட குறைந்த கணனிகளில் Windows 7ஐ நிறுவுவது எப்படி?

உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAM இன் அளவானது 512MB யை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில்  Windows பதிப்புகளில் Windows XP போன்ற இயங்குத்தளத்தையே உங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள். 

சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாக இருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான 512MBயை விடவும் குறைவான கணனிகளில் Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன். 

முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன்  32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம்  64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.

மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும் Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.

கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.

இப்போது  படிமுறைகளை பார்ப்போம்.
  1. முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
  2. Windows 7 32bit ISO வினை mount செய்து  "winsetup.dll" கோப்பை  sources folder இலிருந்து copy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
  3.  இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
    Ctrl + Click on the image to View Full Image
  4.  அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள். 
  5. அதனை  E9 04 00 00 00 சரக்கோவையை  கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replace செய்து save செய்து கொள்ளுங்கள்.
    Ctrl + Click on the image to View Full Image
  6. பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISO வினை open செய்து கொள்ளுங்கள்.  sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின்  ei.cfg கோப்பை delete செய்வதன் மூலம்  அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
  7. அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
நீங்களும்  Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி அதன் புதிய வசதிகளை அனுபவியுங்கள். 

உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் இருப்பின்  commentகளாக பகிர்க. இப்பதிவு பிடித்திருந்தால் share செய்யவும் மறக்காதீர்கள்..

4 comments:

  1. பயனுள்ள பதிவு நண்பரே
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரா...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நண்பா போட்டோ ஸ்லைடு ல இருக்குற ஆங்கில வார்தையி தமிழ் மொழியில் பயனுள்ளதாக மாற்ற கேட்டு கொளுகிரேன் ,

    பயனுள்ள கம்ப்யூட்டர் தகவல்களை காண எனுடைய பிளாக் தளத்தை பார்த்து பயன் பெறவும்
    www.computertricksintamil.blogspot.in
    நன்றி நண்பா

    ReplyDelete