"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Thursday, May 19, 2011

Windows கணனிகளில் மென்பொருள் எதுவுமில்லாமல் CD/DVD களை Burn செய்யலாம்

Windows கணனிகள் builtin CD-copy வசதியை கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் CD அல்லது DVD களை Burn செய்வதற்கான மென்பொருட்களை பயன்படுத்தியே CD/DVD களை Burn செய்வது வழக்கம். இருப்பினும் Windows  வழங்கும் இவ் வசதியை அறிந்திருப்பது நல்லதே , ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் இம் முறையின் தேவை ஏற்படலாம். இந்த வசிதியை பயன்படுத்தி  சில data மற்றும் MP3 கோப்புகளை பதிந்துக்கொள்ள முடியும்.

  1. முதலில் உங்கள் வெற்று (Empty Or writable ) CD/ DVD ஐ கணனிக்குள் உட்செலுத்துங்கள்.
  2. பின்னர் My Computer சென்று CD/ DVD drive வை திறந்து கொள்ளுங்கள்.
  3. நீங்கள் CD/ DVD யில் பதியவிருக்கும் கோப்புகளை "Ctrl-c" அழுத்தி copy செய்யுங்கள். அவற்றை திறந்து வைத்துள்ள CD-ROM "Ctrl-V" அழுத்தி paste செய்து கொள்ளுங்கள். அல்லது தேவையான கோப்புகளை CD-ROM ற்குள்  நகர்த்தியும் (Drag and Drop) இதனை செயற்படுத்தலாம்.
  4. பின் அவை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தற்காளிக (temporary) files/folders களாகவே காட்டும்.
  5. பின்னர் left panel இல் உள்ள "Write these files to CD"  என்பதை தெரிவு செய்யுங்கள்.
  6. அப்போது "CD Writing Wizard" தோன்றும் அதில் CD யில் பெயரை நீர் விரும்பியவாறு மாற்றி "Next" பொத்தானை click செய்யுங்கள்.
  7. "CD Writing Wizard" கோப்புகளை CD க்கு பதிய தொடங்கும். 

பதிவுசெய்யப்பட்டு முடிந்தவுடன் CD-Rom மிலிருந்து CD/ DVD வெளியில் வரும்.
அவ்வளவே தான் இலகுவான முறையில் CD/ DVD களை Burn செய்வதுகொள்ளலாம். 
நீங்களும் முயற்சித்து பாருங்கள்...

No comments:

Post a Comment