"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Saturday, March 12, 2011

நம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் !

Windows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, அது தவிர்ந்த நானறிந்த சில பயனுள்ள மென்பொருட்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக நம் கணனியில் Windows இயங்குதளத்தை புதிதாக நிறுவீராயின் அதற்கு கட்டாயமாக சிறந்த  antivirus ஒன்று அவசியமாகும். இல்லையெனில் anti-malware அல்லது  spyware போன்ற மென்பொருட்களை நிறுவுவது கணனிக்கு பாதுகாப்பானதே...

பின்வரும் இலவச மென்பொருட்கள் Windows personal computer களில் முக்கியமானவையே,
  • PC Decrapifier
  • Windows Backup and Restore or Macrium Reflect
  • Revo Uninstaller
  • CCleaner
  • Microsoft Security Essentials
  • Dropbox or Syncback SE
PC Decrapifier
சில கணனிகளில், மடிக்கணனிகளில்  தேவையற்ற preinstalled மென்பொருட்கள் காணப்படும், இவற்றை கணனியிலிருந்து அகற்றி கணனியை வேகமாக செயற்படுத்த வேண்டுமானால் PC Decrapifier  மென்பொருளை நிறுவி தேவையற்றவற்றை நீக்கிக்கொள்ளலாம். இது ஒரு இலவசமான மென்பொருளாகும். இது வர்த்தக மென்பொருளாகவும் சிறிய விலையில் கிடைக்கின்றது.



Macrium Reflect
நாம் புதிதாக  கணனியொன்றை வாங்கும் போது அதன் system image ஒன்றை உருவாக்கிக் கொள்வது கட்டாயமானது. நீங்கள்  built-in Windows backup and restore center யை பயன்படுத்தி இதனை செய்யலாம், ஆனாலும் அனைத்து Windows இயங்குதளங்களிலும் இது காணப்படாது. சிறப்பான system image முதல்பிரதியை  Macrium Reflect இலவச  மென்பொருளை பயன்படுத்தி பெறலாம்.
http://freeallsoftwares.com/wp-content/uploads/2011/01/Macrium-Reflect.jpg

Revo Uninstaller
add/remove programs களை பயன்படுத்தி கணனியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்ளை நீக்குவதையே நாம் வழமையாக கொண்டுள்ளோம். ஆனாலும் அதை விடவும் சிறந்த மென்பொருளே Revo Uninstaller ஆகும்.

CCleaner
CCleaner  என்பது மிகச்சிறந்த ஒரு மென்பொருளாகும்.  குறிப்பாக தற்காலிக  கோப்புகள் , தரவுகளை temporary files and data களை அழிக்க பயன்படுத்தலாம், அது மட்டுமல்லாது மேலும் சில வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.



Microsoft Security Essentials
Microsoft Security Essentials பற்றி ஏற்கனவே முன்னைய பதிவுகளில்  குறிப்பிட்டிருந்தேன். viruses, spyware and malware என்பவற்றிலிருந்து கணனியை பாதுகாத்துக் கொள்வதற்காக Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்டி வைரஸ் தான் Microsoft Security Essentials ஆகும்.



 Dropbox or Syncback SE
 நமது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புகள் அல்லது தரவுகள்
உங்களை அறியாமலே காணாமல், தொலைந்து அல்லது அழிந்து போயிருக்கும், அவற்றை backing data up செய்து பாதுகாத்து வைத்திருப்பது சிறமமாக இருந்திருக்கலாம், எனவே அவற்றை online backup செய்து கொள்ள கூடிய வசதியை Dropbox ,offline sync மற்றும் Syncback SE போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சேமித்து பாதுகாக்கலாம்.

மேற்குறிப்பட்ட மென்பொருட்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கூடியதுடன் நம் கணனிகளில் கட்டாயம் நிறுவியிருக்க வேண்டிய மென்பொருட்களாகும்.

3 comments:

  1. அவசியமான செய்திகள். பகிர்வுக்கு நந்தி.

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே!
    உங்கள் இந்த உற்சாகப்படுத்தல்களே இன்னும் தரமான பதிவுகளை பகிர உதவுகின்றது... மிக்க நன்றி.

    ReplyDelete