சில கணனிகள் boot ( start ) ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் , கணனிகளை துவங்கி ( start ) செய்து விட்டு பார்த்துகொண்டேயிருக்கும் நண்பர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவ்வாறான நிலையில் இருக்கும் வாசகர்களுக்காகவே இப்பதிவு.
நீங்கள் Windows xp அல்லது Windows 7 ஐ பயன்படுத்துபவராகவும் இருக்கலாம். Windows 7 ஐ உங்கள் கணனியில் நிறுவியிருப்பபீராயின் (minimum system requirements) கணனியின் அமைப்பு தேவைகள் கட்டாயம் காணப்படல் வேண்டும், அவ்வாறு இல்லையென்றால் உங்கள் கணனி மிகவும் மெதுவாகவே செயற்படும். இவற்றை நிவர்த்தி செய்ய சில வர்த்தக மென்பொருட்கள் இருந்தாலும் கிழுள்ள வழிகள் நாமே செய்துகொள்ளக் கூடியவையே.
01.
start கிளிக் செய்து runஐ தெரிவு செய்யுங்கள் பின் அதில் msconfig என டைப் செய்து enter பொத்தானை அழுத்தவும்.
பின்னர் வரும் Window வில் ஐ Start up Tabதெரிவுசெய்யுங்கள் . அங்கு வரிசைப்படுத்தப்பட்டிருப்பவை நம் கணனியை Start செய்தவுடன் சுயமாக இயங்கும் programs களாகும்.
எனவே தேவையற்ற programs களின் தெரிவுகளை நீக்கிக் (uncheck) கொள்ளுங்கள் (உதாரணமாக ms-office, messengers மற்றும் startup பின் போது தேவையில்லாத utilities ). உங்கள் antivirus மென்பொருளை uncheck செய்து விடாதீர்கள்.
பின் Apply பொத்தானை அழுத்திவிட்டு கணனியை Restart செய்து பாருங்கள், வித்தியாசத்ததை நீங்களே உணர்வீர்கள்.
02.
Microsoft Windows XP யில் உள்ள சிறந்த வசதியாக boot defragment யை குறிப்பிடலாம், பொதுவாக சில கணனிகளில் On செய்தே காணப்படும், அவ்வாறில்லையெனில் அதனை பின்வருமாறு செயல்படவைக்க முடியும்.
start கிளிக் செய்து runஐ தெரிவு செய்யுங்கள் பின் அதில் regedit என டைப் செய்து enter பொத்தானை அழுத்தவும்.
பின்னர் வரும் Window வில் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Dfrg\BootOpt imizeFunction வை தெரிவு செய்யுங்கள்.
அங்குள்ள "Enable" பகுதியில் "Modify" செய்து value எனும் பகுதியில் Y என டைப்செய்து Window வை மூடவும் .
பின்னர் Reboot செய்யுங்கள்.
03.
மேலுள்ள வழிகளில் நிச்சயமாக பலன் கிடைக்கும், அதற்கி மேலதிகமாக புதிதாக ஒரு முறையை கண்டறிந்தேன், ஆனால் இம்முறையை பயன்படுத்த வேண்டுமாயின் USB's அல்லது COM ports களை செயல்பாட்டை நிறுத்த வேண்டும், இம்முறையிலும் சிறந்த பயனை பெறலாம்.
Control Panel -> System -> Hardware tab -> device manager சென்று நீங்கள் பயன்படுத்தாத USB's அல்லது COM ports களை Disable செய்து கணனியை Restart செய்யுங்கள்.
இதுதவிர
- தேவையற்ற registry entries களை நீக்குதல்.
- தற்காளிக கோப்புகளை (temporary files) நீக்குதல்.
- வன் தட்டை De fragment செய்தல்.
- spy ware நீக்குதல்.
- Tweak unoptimized settings ளை செய்தல்
- hard disk for errors களை சரிசெய்து கொள்ளல்
Thanks for sharing
ReplyDeleteமிக்க நன்றி, இன்னும் பல முக்கியமான, சிறப்பான பதிவுகள் விரைவில்...
ReplyDeleteநல்ல நுணுக்கமான இடுகை....
ReplyDeleteசற்றே கணினியில் பரீட்சயம் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் தரும்.
வாழ்த்துகள்