"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Thursday, February 17, 2011

Yahoo messenger இல் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Login ஆவதற்கு !


பெரும்பாலானோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட yahoo கணக்குகள் (accounts) இருக்கும். அவை அனைத்திலும் ஒரே நேரத்தில் chat செய்ய விரும்புவீர்கள், ஆனால் நீர் Yahoo messenger 8, 9 அல்லது 10ஐ நிறுவீராயின் அதில் ஒரு கணக்கை கொண்டு மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய ஏனைய கணக்குகளையும் பயன்படுத்த வேண்டுமாயின் மற்றய கணக்கை sign out செய்துவிட்டுதான் மற்ற கணக்கில் log in ஆக வேண்டும்.http://techsalsa.com/wp-content/uploads/2009/02/yahoo.png
எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் எவ்வித மென்பொருள்களும் பயன்படுத்தாமல் log in ஆவது எப்படி என்ற வழியொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இதனை registry யில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் செயற்படுத்தலாம்.

கீழ் காட்டப்பட்டுள்ள படிமுறைகளை செயற்படுத்துங்கள்.

1. முதலாவதாக Start கிளிக் செய்து Run சென்று regedit என டைப் (Type) செய்து enter பொத்தானை அழுத்துங்கள்.



2. பிறகு வரும் வின்டோவில் HKEY_CURRENT_USER ல் உள்ள Software —-> yahoo —-> pager —-> Test என்பதை தெரிவு செய்யுங்கள்.

3. பின்னர் வலப்பக்க page இல் right-click செய்து newதெரிவு செய்து Dword value என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. அதனை Plural என பெயரிடுங்கள் (Rename).

5. பின் அதனை Double click செய்து value data என்பதில் 1 எனவும் decimal என்பதையும் தெரிவு செய்து OK பொத்தானை அழுத்துங்கள். பின்னர் registry editor வின்டோவை Close செய்துவிடுங்கள்.
அவ்வளவே தான் !!

இப்போது உங்கள் yahoo messenger ல் பல கணக்குகளை (accounts)கொண்டு Log in ஆகலாம்



1 comment:

  1. VERY USEFUL BLOG IF YOU NEED MORE ISSUE RELATED TO YOUR PROBLEMS
    YOU CAN VISIT : https://www.technovizions.com/yahoo-emails-issues/
    OR CALL TOLLFREE NUMBER (870)-390-4894

    ReplyDelete