"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Wednesday, February 2, 2011

Google Chrome யை விட சிறந்த இலவச Browser... !

ஆம், இது உண்மை தான்.  Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது... என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon 3.0. நான் Maxthon 3.0 பயன்படுத்துவதற்கு முதல் Google chrome இனை பயன்படுத்தி வந்தேன், சில நேரங்களில் திடீரென்று crashes ஆகிவிடும். ஆனாலும் என்னால் Google chromeஐ மாற்ற மனமிருக்கவில்லை ஏனென்றால் எனக்கு வேகமும் வேகமான உலாவியொன்றும் தேவைப்பட்டதே அதற்கு காரணம். நான் Google chrome லிருந்து Maxthon 3.0 ற்கு மாற காரணமும் அதுவேதான், மேலும் Maxthon 3.0 மிக இலகுவாக பயன்டுத்தலாம்.  வேறு எந்த உலாவியிலும் இல்லாத பல advance optionகள் Maxthon 3.0 ல் உள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த உலாவி பிடிக்கும் என நினைக்கிறேன், அப்படியென்றால் Maxthon 3.0 யில் என்னென்ன விசேட அம்சங்கள் இருக்கிறது என பார்ப்போமா? நிச்சயமாக இதன் சிறப்பம்சங்கள் உங்களை கவரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.


Maxthon இன் சிறப்பியல்புகள் 
  1. Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது. 
  2. Auto -completes நினைவகத்தை கொண்ட  Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.
  3.  Magic Fill Manager எனப்படும் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை save செய்து கொள்ளமுடியும்.
  4.  Popup ads மற்றும்  சில தேவையற்ற windows ளை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும். மேலும் Ad Hunter எனும் சேவையும் அதாவது எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்டவேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.
  5. Mouse Gesture எனப்படும் புதிய வசதியானது, நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எதுவித refresh பட்டன் அல்லது shortcut படடன்களை பாவிக்காமலே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடும்.
  6. இதன் இன்னுமொரு சிறப்பியல்பு Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.
  7. அடுத்ததாக Drag and Drop Search எனும் வசதி, உலாவியில் உள்ள எந்தவொரு சொற்கள் அல்லது வசனங்களை தெரிவுசெய்து நகர்த்தி Search box யில் விட்டால் ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்துவிடும்.
  8. உலாவியிலுள்ளவற்றை இலகுவாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது, மேலும் Redo Page, Home, Recently viewed pages, back மற்றய பொத்தான்கள் இவ்உலாவிக்கு அழகை தருகின்றன.
  9. Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonusகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது, இவற்றை வெவ்வேறான தேவைகளுக்கு பயன்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
  10.  மேலும் Opera மற்றும் Chrome களில் போன்று உங்கள் விருப்ப தளங்ளை save செய்து கொள்ளவும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  11. இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons  வசதியையும் தருகிறது, இதை இங்கே பெற்றுக்கொள்ள http://addonsmx.maxthon.cn முடியும்.
இதை விடவும் மேலும் பின்வரும் வசதிளையும் Maxthon கொண்டுள்ளது.
  1. Synchronizing the general browser Settings,
  2. Setting favorite Search Engines
  3. Tab bar and Smart Address Bar
  4. Page zoom settings
  5. Magic fill and shortcuts
  6. Proxy and Other settings.
இதன் சில வசதிகள் வியக்கத்தக்கவையாகவே உள்ளன. ஏன் இன்னும் பார்த்துகொண்டிருக்கின்றீங்க? இப்போதே Maxthon 3.0 ஐ இலவசமாக எடுத்துகொள்ளுங்கள்.....



4 comments:

  1. மிக பயனுள்ள தகவல்..

    நன்றி நண்பரே....

    ReplyDelete
  2. nalla thagaval side baril irukkum time sound off panninal nanraga irukkum (seconds)

    ReplyDelete
  3. Thanks Friends, I'll modify the clock soon, thanks 4 the suggestions.

    ReplyDelete
  4. பயன்படுத்திப் பார்க்கிறேன்... மிக்க நன்றி நண்பரே...

    epic browser பற்றி தங்களின் கருத்து என்ன...?

    ReplyDelete