"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Tuesday, January 11, 2011

Printbrush – உலகிலே சிறிய Portable கையடக்க Printer !


தற்கால தொழில்நுட்பத்தை பொறுத்த வரையில் புதிய புதிய உபகரணங்கள்  வெகுவாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்த வகையில் இன்று பார்க்க போவதும் அவ்வாறானதொன்றே, உலகிலேயே மிகச் சிறிய Portable Printer.

Printbrush Portable Printer
நாம் அனைவருக்கும் அவசியமான , நாம் பொதுவாக பயன்படுத்தும்  Printer  technology யின் ஓர் புதிய பரிமானமாக இதை குறிப்பிடலாம். நாம் Printer ஒன்றை தெரிவு செய்யும் போது குறிப்பாக கவனிப்பது சிறந்த தரம் (Quality), வேகம் (Speed), பருமன் (Size) மற்றும் Background noise level ஆகியவையே. அவ்வகையில் Printbrush என அழைக்கப்படும் இப் Printer ஆனது ஓரு வித்தியாசமான , விசித்திரமான Printer ஆகும். இதை அறிமுகப்படுத்தியவர்கள் PrintDreams நிறுவனமாகும்.
 இதன் விசேஷம் என்னவென்றால் இந்த Printerஐ  கையில் தூக்கி செல்லலாம். ஓரு தாளின் ( Paper) மேல் இப் Printer ஐ நகரத்தி சென்றால்  இப் பிரின்ட்டரானது அத்தாளில் உள்ள விடயங்களை நிழற்படங்களாக 600 DPI (Dots Per Inch) ஆக பதிவு செய்து கொள்ளும். இதில் Bluetooth communication மற்றும் மீள்நிரப்பு  Rechargeable Batteries களை கொண்டிருப்பதால் இதனை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். மேலும் இப் Printer ஆனது வெறுமனே தாள் ஒன்றிற்கு முடக்கப்பட்டது அல்ல, எந்தவொரு தட்டடையான மேற்பரப்பையுடைய (Fabric material மற்றும் Letter envelopes) போன்ற பொருட்களையும் ப்ரின்ட் செய்துகொள்ளலாம்.
இதன் அறிமுக விலை $199 என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிய விபரங்களை அறிய இக் காணொளியை பாருங்கள்.

 

No comments:

Post a Comment