"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Thursday, June 23, 2011

Pen drive வில் Write Protected எனவருகின்றதா? Remove பண்ணுவோமா?

http://ikeandriani.files.wordpress.com/2009/11/twinmos-mirror-finished-usb-flash-drive.jpg நீண்ட இடைவெளியின் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, வலைத்தளத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. எனினும் அக்கால இடைவெளியில் நான் முகம்கொடுத்த பிரச்சினைகளில் ஒன்று எனது பென் ட்ரைவில் Write protected என ஒரு செய்தி வந்ததே.

சில வேலைகளில் நீங்களும் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பீர்கள், Pen drive வினை வீசி புதிய Pen drive வாங்கி விட்டீர்களா? அதற்காத தீர்வுகளை உங்களுடன் பகிர்கின்றேன்.

இதற்கு முன் என் சில நண்பர்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் வந்திருக்கின்றன என்றாலும் என்னால் எதுவித தீர்வுகளையும் வழங்க முடியாமல் போய்விட்டது, அதனால் அவர்களும் தம் Pen drive வினையே வீசிவிட்டார்கள்.
முதலில் Write Protected Pen drive வினால் ஏற்படும் பிரச்சினைகளை பார்ப்போம், இவ்வாறான பென்ட்ரைவிலுள்ள கோப்புகளை நம்மால் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாது, அவ்வாறு மாற்றங்களை செய்ய முற்படும் போது பின்வரும் செய்திகளை காணக்கூடியதாக இருக்கும்.
  • Cannot copy files and folders, drive is write protected
  • Cannot format the drive, drive is write protected
  • The disk is write protected
  • Remove write protection or use another disk
  • Media is write protected 
usb-drive-write-protected
இவ்வாறான பிரச்சினைகள் pen drive களில் மடடுமன்றி memory card மற்றும் iPod போன்ற USB portable devices களிலும் தோன்றலாம். இதனால் உங்கள் பென்ட்ரைவினை format செய்யகூட முடியாத நிலை ஏற்படும். இது பலருக்கு தலையிடியாக கூட இருந்திருக்கலாம்.

http://img.ehowcdn.co.uk/article-page-main/ehow-uk/images/a07/tq/oh/fix-drive-thats-write-protected-800x800.jpghttp://www.thelifedigital.com/wp-content/uploads/2009/03/viruspenflashdrive.jpg
இதற்கு சில Virus கள் மற்றும் முறையற்ற ரீதியில் கணனியிலிருந்து Safety remove  USB செய்யாமையே காரணங்களாக குறிப்பிடலாம். 
தீர்வு : -
இதற்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும் மிகச்சிறந்த தீர்வினை உங்களுடன் பகிர்கின்றேன்.
01. இங்கு தரப்பட்டுள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், தரவிறக்கச் சுட்டி
பின்னர் உங்கள் Pen drive வினை கணணியுடன் இணைத்து தரவிறக்கிய மென்பொருளை டபல் கிளிக் செய்யுங்கள், உங்கள் பென் ட்ரைவ் Format ஆக தொடங்கும். Format ஆகி முடிந்தவுடன் Pen drive வினை Safety remove செய்து மீண்டும் கணனியில் பொருத்துங்கள்,
சில நேரங்களில் உங்கள்  Pen drive வின் Write protected இப்போதே நீக்கப்பட்டிருக்கும். 
அவ்வாறு இல்லையெனின் அதாவது இன்னும் Write protected என காட்டப்பட்டிருப்பின், கீழுள்ள படிமுறைகளை செயற்படுத்துங்கள்.

02. Start --->> Run, கிளிக் செய்து regedit என டைப்செய்து Enter பொத்தானை அழுத்துங்கள், பின்  registry editor திறக்கும். அதில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
 write-protection-registry
செல்லுங்கள், அங்கு StorageDevicePolicies என இல்லாவிடின் இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து add.bat  பின் டபல் click செய்யுங்கள். இப்போது registry editor இல் Storage Device Policies இடப்பட்டுவிடும். 
பின் WriteProtect எனும் Key யினை Double Click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Value Data எனும் பகுதியில் 0 (பூச்சியம்) என டைப் செய்து  OK பொத்தானை அழுத்துங்கள்.


பின்னர்  Registry யை மூடி விட்டு , கணணியை restart செய்யுங்கள். மீண்டும் உங்கள் பென் ட்ரைவினை கணனியில் பொறுத்துங்கள், அவ்வளவே தான்...

இன்னும் உங்கள் Pen drive வில் Write Protected என செய்தி வருகின்றதா? உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

5 comments:

  1. "Pen drive வில்farmat எனவருகின்றதா?

    ReplyDelete
  2. Ravi.R - 4THEPEOPLE

    http://bloggersbiodata.blogspot.com/2011/08/ravir-4thepeople.html

    ReplyDelete
  3. வருகைக்கு மிக்க நன்றி. நண்பா உங்கள் கேள்வி விளக்கமாக, தெளிவாக பகிர்ந்தீராயின் அதற்கான தீர்வை வழங்க இலகுவாக இருக்கும்...

    பலே பிரபு அவர்களே உங்கள் தளம் மிக அருமையாக உள்ளது. எனது தளத்தையும் இணைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  4. எந்தப்பென்dறைவை போட்டாரலும் wrte protectedஎன்று வருகிறது அப்படிஎன்றால் இது compiuter இல்தானே பிரச்சனை இதற்க்கு என்ன செய்வது zaeemhafiz@gmail.com

    ReplyDelete
  5. எந்தப்பென்dறைவை போட்டாரலும் wrte protectedஎன்று வருகிறது அப்படிஎன்றால் இது compiuter இல்தானே பிரச்சனை இதற்க்கு என்ன செய்வது??

    உங்கள் User Account ற்கு கடவுச்சொல் இட்டிருந்தாள் அதனை முதலில் அகற்றவும்.பின்னர் Log off செய்து விட்டு ஏதாவது கோப்பை copy , paste செய்துபாருங்கள் இன்னும் நீங்கவில்லை என்றால் உங்கள் கணனியிலுள்ள Folder களில் Right click செய்து Properties சென்று அதில் Read Only என்பதன் தெரிவை நீக்கி Apply செய்யுங்கள். Apply Changes to this folder, sub folders
    and files --> Ok

    ReplyDelete