சமூக வலைகளில் மூழ்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை மாற்ற வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகும் என எச்சரிக்கிறார் கூகிள் நிறுவன செயல் தலைவர் எரிக்.
இன்றைய கால கட்டத்தில் பெரும்பான்மையான இளைஞர்கள் நட்புக்காகவும் மேலும் பல விடயங்களுக்காகவும் சமூக வலைதளங்களுக்கு சென்று தங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கொடுத்து வருகின்றனர்.
இது போன்ற வலைதளங்களில் எந்த அளவிற்கு சாதகங்கள் இருக்கின்றனவோ அத விட அதிகமாக பாதகங்களும் உள்ளன என்பது போன்ற எச்சரிக்கை கட்டுரைகள் பல வந்தும் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு மிகப் பெரிய பொழுது போக்காக மாறிக் கொண்டுதான் வருகின்றது.
கடந்த வாரத்தில் பரபலமான சமூக வலையில் ஊடுருவிய சிலர் அதில் இருந்த புகைப்படங்களை ஆபாசப் படங்களுக்காக பயன்படுத்தியதும் வேறு பல குற்றங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
சமூக வலைதளங்களில் இது போன்ற தனிப்பட்ட விபரங்களை அளிப்போர் தங்கள் அடையாளங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக இளைஞர்கள் தங்கள் பெயரையே மாற்ற வேண்டிய சூழலுக்கும் தள்ளப்படுவர்.
சொல்லப்போனால் இது ஒரு பார்ட்டிக்கு செல்வது போன்றது தான். வீடு, அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலிருந்தும் இந்த சமூக வலைத்தளங்கள் உபயோகிக்கப் படுகிறது. பலரும் தங்கள் சொந்த விபரங்கள் அனைத்தையும் அங்கே தெரிவித்து விடுகின்றனர். ஒரு உதாரணத்திற்காக சொல்ல வேண்டுமானால் எங்கோ பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடன் அருகாமையில் இருக்கும் சகபயணி உங்களை தெரியாதவர் புதிதாக நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக சொல்கிறார் என்றால் அவரிடம் போய் உடனடியாக அ முதல் ஃ வரையிலான உங்கள் குடும்ப மற்றும் தொழில் சார்ந்த விபரங்களையும் புகைப்படங்களையும் காண்பிப்பீர்களா?? அப்படி ஒரு வேளை நீங்கள் செய்தால் அது உங்கள் தவறே தவிர அவருடைய தவறாகாது.
தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர் என்றால் அதை பயன்படுத்தத்தானே செய்வார். சமூக வலைதளங்களில் அனைத்து விபரங்களையும் கொடுத்து விட்டு வம்பில் மாட்டிக்கொண்டு வாழ்கையையும் , தொழிலையும் இழந்தவர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்த அட்டுழியங்களால் மன நிம்மதியை இழந்தும் வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இருக்கும் சுயவிபர பக்கத்தில் உங்கள் விபரங்களை முற்றிலும் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. சிலர் பெயர், முகவரியில் தொடங்கி தொலைபேசி எண்கள், பணி விபரங்கள், பிறந்த நாள், அவர் தினமும் செய்யும் பணிகள் என்னென்ன என்பதையும் மற்றும் அவர்தம் குடும்ப விபரங்கள், குடும்ப புகைப்படங்களை எல்லாம் அதில் போட்டு விடுகின்றனர்.
இது போதாதா தவறு செய்ய காத்திருக்கும் கழுகு கூட்டங்களுக்கு. இந்த வலைதளங்கலாவது ஏதாவது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. ஒரு நபரின் மூலமாக அவர் நண்பர்கள் அனைவரின் விபரங்களையும் பார்க்க முடிகிற அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
1 . இந்த வலைதளங்களில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ அதைவிட அதிகமாகவே பயன்படாத விஷயங்களும் உள்ளது. அதால் சமூக வலைகளில் பார்ப்பனவற்றை எல்லாம் அப்படியே உண்மை என நம்பக்கூடாது. அவரவர் சொந்த ஆதாயத்திற்காகவும் தகவல்களை திருடுவதற்காகவும் பொய் சொலவது தான் அங்கு பெரும்பான்மையாக நடக்கிறது. எந்த தொழில் செய்பவராக இருப்பினும் சமூக வலைகளை அளவோடு பயன்படுத்துவது. இதனால் சிறு மற்றும் குறு தொழில்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றன.
2 . இந்த சமூக வலைதளங்களில் பெரும்பான்மையான தளங்களில் மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலமாக மறைக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட தகவல்களை கூட எடுத்து விட முடியும். இது எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
3 . இன்னும் சில இடங்களில் தொழிலாளர்கள் தவறாக பயன்படுத்துவதால் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தகவல்கள் திருட்டு போய்க் கொண்டிருக்கின்றன. சில தொழிலாளிகள் தன்னை பற்றிய விபரங்களை இது போன்ற தளங்களில் கொடுக்கும் போது எங்கே வேலை செய்கின்றார் என்பதையும் பணியின் தன்மையையும் குறிப்பிடுகின்றார். அதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு கெடுதல் நினைக்கும் கும்பல்கள் இவரிடம் நண்பர் போன்று பேசியோ அல்லது மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலமாகவோ அந்த நிறுவனத்தின் விற்பனை சார்ந்த யுக்திகளை தடுப்பதும் அதனை தங்களுக்கு சாதகமாகி கொள்வதும் தொடர்கிறது. பணியாளர்களிடம் பணியில் சேரும் முன் இது போன்ற தொழில் ரகசியங்களை சமூக வலைகளில் தெரிவிக்க கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்வது மிகவும் நல்லது.
4 . சமுக வலைதளங்களின் மூலமாக உங்கள் கணினியில் வைரஸ்கள் , spyware , malware ஆகியவை பரவ வாய்ப்புண்டு. இதற்கு தீர்வு தான் என்ன?? இதற்காக சமுக வலைகளை முற்றிலுமாக அழித்து விட முடியுமா என்றால் அதுவும் முடியாது. சில நன்மைகளும் இருப்பதால் நாளுக்கு நாள் இவை பெருகிக் கொண்டே தான் போகும். கவனமான முறையில் சிந்தித்து பயன்படுத்தினால் நன்மையே.
No comments:
Post a Comment