TOP NEWS

Welcome To 4THEPEOPLE Educational Blog. Leave Your Doubts, Suggestions, Feed backs and Comments .Thank You...

Wednesday, November 23, 2011

உங்கள் கணனியில் Task Manager Open ஆகவில்லையா?

 Task Manager ஆனது Inbuit  நிகழ்ச்சி நிரலாக Windows  வழங்கியுள்ள சிறப்பான ஓர் வசதியாகும். இதனை பொதுவாக நம் கணனியில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் (Run) விடயங்களை அறிய, சில Task அல்லது Program களை இலகுவாக Start செய்யவும் End செய்யவும்  பயன்படுத்துகின்றோம். மேலும் இதன் மூலம்  RAM, CPU usage மற்றும்  Performance போன்றவற்றை அறியலாம்.  சில கணனிகளில் திறக்க மறுக்கும். இது Virus மற்றும் Trojan தாக்குதல்களினால் Disable செய்யப்பட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான Error Message வரக்கூடும்.

 
இதனை சரிசெய்ய பல முறைகள் காணப்படுகின்றன. அதிகமானோர் இதனை அறிந்திருந்தாலும் அறிந்திறாதோருக்காக இப்பதிவை பகிர்கின்றேன். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

01. முறை
  • Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
  • அதில் gpedit.msc என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
  • பின் Group Policy Editor இல்
User Configuration  சென்று Administrative Template என்பதில்  System தெரிவு செய்து Ctrl + Alt + Del Optionஎன்பதை  Click செய்யுங்கள்.

அங்கு Remove Task Manager என்பதை Double Click செய்து
அதில் Not Configured என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.

02. முறை
  • Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
  • அதில் regedit என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.

  • பின் அதில்

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System


அதன் வலப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள DisableTaskMgr என்பதில் Right Click செய்து Delete செய்யுங்கள் பின் அதனை Confirm செய்து விடுங்கள்.
 
03. முறை
Task Manager Fix ஐ தரவிறக்கம் செய்து Run ( Double Click) செய்யுங்கள்

நீங்களும் Task Manager யை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

2 comments:

Saturday, November 19, 2011

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்கங்களின் ஊடாக Torrent கோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். 
இவை இலகுவாக இருப்பினும்  இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers, internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection  இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும். 
  • முதலில்  www.torrentz.eu என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு  Download செய்துகொள்ள வேண்டிய torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.
  • பின்னர் தெரிவுசெய்த கோப்பினை  Download செய்து கொள்ளுங்கள். 
  • Download செய்த பின்னர்  www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி upload செய்து கொள்ளுங்கள். 
  • இங்கு உங்களுக்கு  generate செய்யப்பட்டு புதிய  torrent link தரப்படும் அதனை copy செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது  www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு register ஆக வேண்டும் (இலவசம்).
  • copy செய்த சுட்டியை  paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்.
  • இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
  • தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல்  click செய்தால் போதும் IDM window தேன்றும். 
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

9 comments:

Sunday, November 6, 2011

உங்கள் கணனியில் கட்டாயம் இருக்க வேண்டிய Utility "Wise PC Engineer"

உங்கள் கணனியை வேகமாக செயற்டுத்த Windows Registry clean , free up disk space, defragment registry and disk போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள பல Utility களை பயன்படுத்தியிருப்பீர்கள். அது மட்டுமல்லாது தொலைந்த கோப்புகளை  recover செய்துகொள்ள , முக்கிய file or folderகளை மறைத்து (hidden)வைத்தல்  , personal applications களை கடவுச்சொற்களை இட்டு lockசெய்து வைத்திருக்க பல்வேறு மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள்.மேலும் இந்த Wise PC Engineer மென்பொருளை பயன்படுத்திய பின் இதுவே மிகச்சிறந்த registry cleaner software அல்லது  disk cleaner என நீரே உணருவீர்.

இம் மென்பொருளின் சிறப்பம்சம் யாதெனில்  மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தையும் ஒரே மென்பொருளிலேயே உள்ளடங்கியிருப்பதாகும். 
உங்கள் கணனியின் வேகம் குறைவாக உள்ளதே என கவலைப்படத் தேவையில்லை இம் மென்பொருளை பயன்படுத்தி நம் கணனியின் Performance ஐ  இலகிவாக அதிகரித்துக் கொள்ளலாம். 

இவ் Wise PC Engineer இல் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? 
  • Registry Backup
  • Registry Cleaner
  • Registry Defragment
  • Startup Program Manager
  • Disk Cleaner
  • Disk Defragment
  • File Recovery
  • File/Folder/Drive Scrub
  • Memory Optimizer
  • Windows Auto Shutdown
  • File/Folder Hider
  • Application Encrypt and Unencrypt
  • 1-Click Tune-up
போன்ற அம்சங்கள் காணப்படுகின்றது. 

இம் மென்பொருளை இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்க சுட்டி.
இலவச மென்பொருளில் சில சிறப்பம்சங்கள் நீக்கப்பட்டிருக்கும். எனவே Register செய்து கொள்ள இங்கு தரப்பட்டுள்ள License Key ஐ பயன்படுத்தி Register செய்துக் கொள்ளலாம்.

இப்போது Registry Backup, Registry Cleaner, Registry Defrag போன்ற பல சிறப்பான சேவைகளையும் அனுபவிக்கலாம்.

4 comments: