TOP NEWS

Welcome To 4THEPEOPLE Educational Blog. Leave Your Doubts, Suggestions, Feed backs and Comments .Thank You...

Wednesday, December 29, 2010

Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?

நம்மில் அதிகமானோர்  Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேலைகளில் நாம் தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும். நீங்கள் தொழில் புரியும் இடங்களில் shared computer களை பயன்படுத்துபவராயின் சில முக்கிய , இரகசிய தகவல்கள் கொண்ட ஆவணங்களை மற்றயவர்கள் பார்த்து விடுவார்களோ? என்ற பயம் (எண்ணம்) உங்களுக்கு வந்திருக்களாம். இதற்கு தீர்வாகவே Microsoft Office 2007 ஆனது Security வசதிகளை வழங்கியிருக்கின்றது.
இப் பாதுகாப்பு வசதியானது Microsoft Word மட்டுமல்லாது Microsoft PowerPoint, Excel இலும் பயன்படுத்த கூடியவாரு அமைக்கப்பட்டுள்ளது.
 இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.
கீழ் காட்டப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றி  Password Protection வழங்க முடியும்.
 1. Microsoft Office இல் இடது பக்க மேல் மூலையிலுள்ள Microsoft Office Button யை Click செய்யுங்கள்.
 2. அங்கு  Save அல்லதுSave As option யை Click செய்யுங்கள்
 3. பின்னர்  வரும் pop up window வில் Tools option Button யை Click செய்யவும்.
 4.  அதில் உள்ள General Option யை கிளிக் செய்து விட ஒரு Pop Up தோன்றும்
 5. பிறகு வரும் window வில் இரு optionகளில் ஏதாவது ஒன்றை தெரிவு             செய்யவும்.
 6. முதலாவது  Password To Open இதை வழங்கினால் நீங்கள் அந்த Document யை திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.
 7. இரண்டாவது  Password To Modify இதை வழங்கினால் யாராவது அந்த Document யை மாற்றியமைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.
 
அவ்வளவே தான் உங்கள் Document Password வழங்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிட்டது.

0 comments:

Thursday, December 23, 2010

உலகிலேயே முதல் Electric விமானம்!

முதல் Electric விமானம் Sonex நிறுவனம் அறிமுகப்படுத்துயுள்ளது. இவ்விமானமானது Electric cars அல்லது Electric bikes களை போன்று பாதுகாப்பானது அல்ல, பொதுவாக ஆகாயத்தில் பறக்கும்போது சில விபத்துக்களை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்காக இவ்வகை விமானங்களில் பறக்க கூடாது எனவோ, பாதுகாப்பானது ஒரு துளி கூட இல்லை என்றோ எண்ணக் கூடாது.
 
இவ்  Sonex Electric விமானமானத்தின்  முதல் test fly யை சில நாடகளுக்கு முன் நடாத்தியது. அதன் போது அவ்விமானம் பாதுகாப்பானது என Sonex நிறுவன முகாமையாளர் , E-Flight தலைவர் தெரிவித்ததோடு அவர்கள் இருவருமே முதல் முதலாக அவ்விமானத்தில் பறந்தனர்.
இதற்கு பறக்கும் கால அளவை வழங்குவதே தற்போதுள்ள பிரச்சினையாக உள்ளதாகவும், அனையும் மிக விரைவில் செய்வதாகவும் மேலும் பல பரிசோதனைகளையும் நடத்தி வருவதாகவும் Sonex நிறுவனம் தெரிவிக்கின்றது.

0 comments:

Sunday, December 12, 2010

கணினியில் இருந்து பீப் ஒலி வருகிறதா?

கணினி On செய்தவுடன் Bios ஆனது Booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
http://www.howtoarchives.com/wp-content/uploads/2009/08/beeps-on-computer.jpg
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- Ram அல்லது Motherboard


4 , முறை - டைமர் (Motherboard ) இனை சரி செய்யவும்


5 , முறை - ப்ராசசரில் (Procsser) சிக்கல்


6 , முறை - Key board , Key போர்டு கண்ட்ரோல் , Key போர்டு கண்ட்ரோல் ஷிப்


7 , முறை - Motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

http://www.ngohq.com/attachments/games/2348d1258355675-beep-sounds-when-playing-games-img_1478.jpg

 மேற்குறிப்பிட்ட விடயங்களை சரிபார்ப்போமாயில் கணணி பீப் ஒலி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

0 comments:

Wednesday, December 8, 2010

அறிமுகமாகும் கூகுள் குரோம் 8 : PDF reader மற்றும் Web Store support களுடன்

தனிநபராக நின்று தனது கடுமையான உழைப்பில் Google நிறுவனமானது Google Chrome இன் புதிய பதிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். அப்பதிப்பிற்கு Google Chrome 8 என பெயரிட்டுள்ளனர். Google Chrome 8 பதிப்பானது சில புதிய பிழைத்திருத்தங்களுடனும் , புதிய வசதிகளுடனும் வெளிவந்திருக்கின்றது.
 
இக் கூகுள் குரோம் பதிப்பானது 8 or 8.0.552.215 ற்கு துள்ளியமாக புதுப்பித்துக்கொள்ள முடியும். மேலும் இதனை இனி வரப்போகும் Chrome Web Store களுக்கும் Support செய்யும் என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும். இதன் சிறப்பியல்பாக built-in PDF reader, After the built-in Flash support உள்ளடக்கப்பட்டுள்ளதை குறிப்பிடலாம். இப் Browser ரின் வடிவமைப்பாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் PDF file களை பார்வையிட வேண்டுமாயின் PDF reader மென்பொருட்களை களை Download செய்யாமலேயே Google Chrome 8 யின் உதவியால் பார்க்க முடியும். இவ்விரு வசதிகளுடன் மேலும் 800 பிழைத் திருத்தங்களை கொண்டுள்ளது. Google Chrome 8 யின் அனுபவம் பாதுகாப்பானதும், மகிழ்ச்சிகரமானதுமாக அமையும். 
தனிநபராக நின்று Google Chrome 8 யினை அறிமுகப்படுத்திய பெருமை Google நிறுவனத்தையே சாரும். Google நிறுவனமானது Chrome 9 beta build ஐ யும் பரிசோதித்து வருகின்றமமையும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் நிங்கள் Google Chrome 8 ற்கு மாறவில்லையா? இப்பொழுதே இப் புதிய அனுபவத்தை Chrome 8 உடன் அனுபவியுங்கள். Download Google Chrome

0 comments:

Friday, December 3, 2010

Kingston அறிமுகப்படுத்தும் HyperX MAX 3.0 external USB 3.0 hard drive!

Kingston லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும். இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GBகொள்ளளவுகளில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது. இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும்  write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும்.

Kingston HyperX MAX 3.0 இன்  சிறப்பியல்புகள் மற்றும்  விவர வரையறைகள் : - 
 • Performance — USB-IF SuperSpeed-Certified
 • Standardized — complies with USB 3.0 specification standards, compatible with USB 2.0
 • Sequential Speed — Read — up to 195MB/sec., Write — up to 160MB/sec
 • Shock-resistant — built with Flash components so no moving parts
 • Portable — Aluminum design is sleek, stylish and rugged
 • Silent — runs silently with no moving parts
 • Easy — plug & play with no driver required; utilizes USB bus power with no additional bus power required
 • Guaranteed — three-year warranty
 • Capacities — 64GB, 128GB and 256GB
 • Dimensions — 2.89″ x 4.67″ x 0.47″ (73.49mm x 118.60mm x 12.00mm)
 • Vibration Operating — 20G Peak, 10-2000Hz, (20min/Axis) x 3 Axis
 • Vibration Non-operating — 20G Peak, 10-2000Hz, (12 Cycle/Axis) x 3 Axis, x 20min.
 • Operating Shock — 1500G
 • Operating Temperature — 0° to 60°C / 32° to 140°F
 • Storage Temperature — -20° to 85°C / -4° to 185°F
 • Power Consumption — 4.5W

0 comments:

ஜப்பானியர் தயாரித்த ஓர் அதிசய Robot

ஜப்பானில் நாளுக்கு நாள் புதிய புதிய Robot களை உருவாக்கி வருகின்றனர். இன்று பார்க்க போவதும் ஜப்பானியர் தயாரித்த ஓர் அதிசய Robot ஜ பற்றியதாகும். மற்றய ரோபோட்களுக்கு நடக்க , பாட, கதைக்க தெரியும் இந்த ரோபோட் இன் விஷேடம் அவற்றில் ஒன்றுமே இல்லை , இதற்கு strawberries பழங்களை பறிக்க தெரியும். 
என்னடா பழம் பறிக்கின்ற Robot தயாரித்தல் சின்ன ஒரு விஷயம் தானே.... என்று யோசிக்கிரிங்களா? அப்படி என்னதான் சிறப்பு அதில் இருக்கிறது என்று தான் பார்போமே....
 

பொதுவாகவே இதன் தோற்றம் மனிதனை போன்றதல்ல, இது advanced robots களில் ஒன்றாகும். மனிதனுக்கு உதவி செய்து நம் வேலைகளை இலகுவாக்கி கொள்ள உதவுகின்றது. விவசாயத்தில் இந்த வகை ரோபோட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகிலேயே ஸ்ரோபரி பழம் பறித்த முதல் ரோபோட் இதுவேயாகும். பழங்களை பறிக்கும் போது அவற்றிற்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பறிப்பது இதன் ஓர் சிறப்பியல்பாகும்.

 
இதில் பொருத்தப்பட்டுள்ள இரு Cameras களின் உதவியுடன் 80% ற்கு மேல் சிவப்பான பழுத்த பழங்களை பறிப்பதுடன் ஒரு பழத்தை பறிக்க 09 செக்கன்கள் மட்டுமே செலவிடுகின்றது. 1,000sqm பரப்பில் ஸ்ரோபரி பழங்களை மனிதர்கள் பறிப்பதாயின் 500 மணித்தியாலங்கள் செல்கின்றன ஆனால் இந்த ரோபோட் 300 மணித்தியாலங்களில் எதுவித பழுதுகளும் ஏற்படாமல் பறுத்து விடுகிறது  என்பதே இதன் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். 

0 comments:

Saturday, November 27, 2010

Windows கான Shortcut கீகள்

01. Shortcuts to get access to Windows Features 

http://chuckspcsolutions.com/files/QuickSiteImages/keybord_chukpc.jpg

Windows Key + E Start Windows Explorer (in My Computer) 

Windows Key + R Open the Run window 

Windows Key + F Open Windows Search. Pressing - F3 on empty desktop works too 

Windows Key + L Lock the keyboard / computer 

Windows Key + F1 Display Windows Help 

Windows Key + P Choose Presentation Display Mode 

Windows Key + X Open Mobility Center

 

2. Windows 7 Taskbar shortcuts 

Windows Key / Ctrl + Esc Activate Start Button. Then use arrow keys, Space Bar and Enter to navigate within Start Menu 

Windows Key + T Go to first item in taskbar, continue with arrow keys 

Windows Key + B Go to first item in system tray 

Shift + Left-Click on a taskbar item Start new instance of taskbar item 

Ctrl + Shift + Left-Click on a taskbar item Start new instance of taskbar item as administrator 

Shift + Right-click on a taskbar item Show the window menu for the program 

Windows Key + 1…9 Switch to application in position N on taskbar (or launch pinned application) 

Shift + Windows Key + 1…9 Start new instance of taskbar item in position N on taskbar

http://www.zoommultimediabd.com/all_item/keybord.jpg 

03. Shortcuts for navigating Desktop 

Arrow Keys Navigate between and select single icons on desktop (when focus is on the desktop) 

Home / End Select first / select last object on desktop 

Enter Launch active icon 

Shift + F10 Activate context menu of active icon by simulates right mouse button. Once in the context menu use arrow keys, a-z and Enter to select item 

Tab, Shift + Tab on empty desktop Navigate between desktop, the quick-launch bar, task bar and notification bar. Then use arrow keys and Enter or Space Bar to activate specific icons 

a, b, c, … Pressing the first letter of the name of any objects will highlight the application or folder. Continue typing the object name if multiple objects start with the same letter.

 

04. Shortcuts useful for Windows Admins 

Windows Key + Break Display System Properties window 

Ctrl + Windows Key + F Search for Computers (with Active Directory activated) 

Windows Key + Pause Access System Properties which holds system properties, computer name, device manager and so on 

Alt + Page Up / Alt + Page Down Move between programs from left to right / from right to left 

Alt + Insert Cycle through programs in the order they were started 

Alt + Home Display the Start menu 

Ctrl + Alt + Pause Break Switch between a window and full screen 

Ctrl + Alt + End Display the Windows Security dialog box 

Alt + Del Display the system menu 

0 comments:

Thursday, November 25, 2010

விண்டோஸ் 7 ஷார்ட்கட் Key கள்

http://www.qliner.com/hotkeys/keyboard.png
Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.

Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.

Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.

Win + L  உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.

Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.

Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.

Win + P  பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.

Win + R  ரன் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

Win + U அக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.

Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.
http://www.kodyaz.com/images/ergonomic/LogiTech-Wave-Keyboard.jpg 
Win + Tab  Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம்.

Win + D Open செய்துள்ள Programme களை Minimize செய்துக்கொள்ளலாம். 

Alt + Tab Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம், Minimize செய்த  Programme களை Maximize செய்யலாம்.

Alt + F4 செயற்பட்டும் ஒரு Programme  அல்லது பல Programme களை Close செய்ய பயன்படுத்தலாம்.

Ctrl + Shift + Esc Task manager ரை Open செய்யலாம்.

 இன்னும் பல Shortcut Keys கள் அடுத்த  பதிவுகளில்........


2 comments:

Wednesday, November 17, 2010

மீடியா பிளேயரில் அணைத்து Format வீடியோக்களை Play பண்ண வேண்டுமா!

நாம் விண்டோஸ் இயங்குதளம்  (Operating System)  தான் அதிகம் பயன்படுத்துவோம், இதில் Default-ஆக ஆடியோ கேட்பதற்க்கும் & வீடியோ பார்பதற்கும் மீடியா பிளேயர் உள்ளது.

இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புகள் (Format) Support செய்யாது.
இந்த வகையான வடிவில் உள்ள கோப்புகளை நாம்  மீடியா பிளேயரில் பார்க்க வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது.இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும் நீங்கள் 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX........ போன்ற வடிவில் உள்ளவற்றை Media Player Classic மீடியா பிளேயரில் காண முடியும்.

Install Components Menu

Media Player Classic

Video Decoder Settings


Audio Decoder Settings

Volume Mixer With Enabled Normalization


இந்த மென்பொருள் விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செயல்படும்.

Click Here To Download Windows® Essencials Codec Pack

0 comments:

ஜப்பானின் நடிக்கும் ரோபோ ' Geminoid F '

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது.

இந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதனை உருவாக்கியவர் 'ஹிரோசி இசிகுரோ' என்ற ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளர் ஆவார்.

பொதுவாக இவரது அண்ரோயிட் ரோபோக்கள் 1.2 மில்லியன் அமெரிக்கடொலர்கள் விலைகொண்டவை.

இந்த ரோபோவானது, அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பாத்திரமொன்றினை ஏற்று நடித்திருந்தது.

இதன் அசைவுகள் மற்றும் உணர்வுகளை நாடக மேடைக்குப் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் நடிகை ஒருவர் வெளிப்படுத்தினார்.

இப்பாவனைகள் கெமராவின் உதவியோடு ரோபோவினால் இணங்காணப்பட்டதுடன் ரோபோ அதற்கேற்றவாறு நடித்திருந்தது.

இதன் குரலுக்காக மைக்ரோபோன் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் நடிப்புத்திறனை நீங்களும் கண்டு களியுங்களேன். 

0 comments:

Tuesday, November 2, 2010

சூரிய சக்தியில் வயர்களற்ற கணினி 'கீபோர்ட்' ''LogiTech'' அறிமுகம்

http://www.virakesari.lk/news/admin/images/keyboard--wireless.jpg
லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற (Wireless) கீபோர்ட்கள், பற்றரிகளின் மூலமே இயங்கி வந்தது. ஆனால் லொஜிடெக்கின் புதிய கீபோர்ட்கள் சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.
http://www.dionicgroup.com/files/1/Logitech_logo.jpg

ஒரு தடவை முற்றாக 'சார்ஜ்' செய்தால், சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென லொஜிடெக் உறுதியளிக்கின்றது.
இது 80 அமெரிக்க டொலர்களில் விற்பனையாகிறது.

0 comments:

Thursday, October 28, 2010

விண்டோஸ் 8 தொகுப்பு 2012 இல் ?

http://www.newsden.net/wp-content/uploads/2010/06/windows8_thumb.jpg


விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.
http://img.brothersoft.com/screenshots/softimage/w/windows_8_superbar-251139-1245759282.jpeg


அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.


மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.


மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

1 comments:

Saturday, October 23, 2010

@tamil.com , இன்னும் பல Domian இல் E-Mail கணக்கு உருவாக்க வேண்டுமா?

இனைய உலகில் கூகுள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றது. கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புது வசதிகள் ஏற்படுத்தினாலும்  Yahoo,Hotmail பயனாளர்கள் ஜீமெயில் பக்கம் வருவதாயில்லை. ஆனாலும் ஜிமெயில் முன்னிலையில் இருந்துகொண்டு சிறப்பான சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.
     நாம் இப்போது பார்க்கப் போவது Tamil.com என்ற டொமைனின் கீழ் ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்குவது பற்றி. அனைவருக்கும் தங்கள் பெயரின் பின்னால் @tamil.com என்று வந்தால் மிகவும் நனறாக இருக்கும். இதனை எமக்கு Mail.com என்ற தளமே வழங்குகின்றது. இத்தளம் 50 க்கும் மேற்பட்ட பெயர்களின் கீழ் மின்னஞ்சல் சேவையை வழங்குகின்றது.  உதாரணமாக @mail.com, @myself.com , @homemail.com இன்னும் பல இருக்கின்றன . இவை அனைத்து கணக்கிற்கும் நுழைவாயில் Mail.com தான்!



Tamil.com  மின்னஞ்சல் உருவாக்க Mail.com சென்று Sign Up என்பதை Click செய்யுங்கள். பின் படிவத்தை பூர்த்தி செய்து Choose Domain என்பதில் Hobbies என்ற பிரிவின் கீழ் Tamil.com காணப்படும் அதனை தெரிவுசெய்யவும். பின் Check பட்டனை அழுத்த Check செய்து உங்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்தால் Available என்று காட்டப்படும். கிடைக்காவிடில் வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்படும். அதில் ஒன்றைத் தெரிவுசெய்யலாம். அல்லது வேறு பெயர்களைக் கொடுத்து முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரோடு இலக்கங்களை சேர்த்தும் பார்க்கலாம். இனி தயார்!

   இக்கணக்கை நிரந்தமாக பயன்படுத்த ஒன்றை வழங்கிவிடுங்கள். மாதம் ஒருமுறையாவது பாவிக்காவிட்டால் கணக்கு மூடப்படும். சில நாட்களின் பின் மீண்டும் முயற்சி செய்தால் அக்கணக்கை திரும்பப்பெறலாம்.

0 comments:

Tuesday, October 19, 2010

(IDM) Internet Download Manager 5.19

எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், சில அவசிய நோக்கங்களுக்காகவும் சேமித்து வைத்து அதனைப் பின்னர் பயன்படுத்த அல்லது எங்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் அதனை எடுத்துச் செல்ல மற்றும் இணையத்துடனான இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் நாங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள இதற்கு மட்டுமல்ல, எங்களிடம் காணப்படும் இணைப்புக்கான வேகம் குறைவானது அப்போது எங்களுக்குத் தேவையான வீடியோ, ஓடியோ மற்றும் மென்பொருள் கோவைகளை பயன்படுத்த வேண்டும்.  இதற்கெல்லாம் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் போது  சடுதியான  மின்சாரத்துண்டிப்பு, இணைய நேரத்திற்கான கால விரயம், இல்லை,  நாங்கள் அவசரமாக இணைப்பினைத் துண்டிக்க வேண்டும் ஆனால் இந்தப் படக்காட்சியை வந்து இறக்கிக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகமும் உஙகளுக்கு இருக்கலாம். எல்லாவற்றுக்குமான தீர்வு,  இவ்வாறு பல தேவைகளைகளின் தீர்வு நாயகனாக வந்திருக்கிறான் இந்த மென்பொருள்.
இதன் சிறப்பம்சங்களில் youtube வீடியோக்களை இதிலேயே தரவிரக்கம் செய்ய முடியும் என்பது குறுப்பிட்டு கூறவேண்டியதாகும்.
http://vbloginfinity.files.wordpress.com/2010/07/idm-logo.jpg

மேலும் இது தொடர்பாக அதிகமானவர்களுக்கு தெரிந்திருந்தாலும், இந்த மென்பொருளை தங்களுடைய கணினியில் நிறுவியதும் அது ஒரு மாதகால அடிப்படையிலேயே இயங்கக்கூடியதாகவும் இருந்திருக்கும் அதுமட்டுமல்ல அடிக்கடி அதனை பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் முன்னால் வந்து எங்களை தொன தொனப்பு ஆளாக்கி இருக்கலாம். 

மேலும் இவற்றிக்கெல்லாம் தீர்வாக இந்த மென்பொருளை உங்களுக்கு முழுமையாக எவ்வாறு தங்களுடைய கணினியில் நிறுவி இயக்குவது என்பதை நாங்கள் இன்று பார்க்கப் போகிறோம்.

இதனை நீங்கள் இங்கு தரைஇறக்க முடியும்........

http://www.internetdownloadmanager.com/articles/vista-idm/idm-vista-download.jpg

முதலில் மேலே சொன்னது போல் உங்கள் கணினியில் அதனை தரையிறக்கிக் கொள்ளவும் அத்துடன் உங்கள் கணினியில் நீங்கள் நிறுவியுள்ள    AntiVirus Software  uninstall  பண்ணிவிட வேண்டும். ஏனெனில் எமது ரிஜிஸ்டர் பையிலை அவர் நிறுவ விடாமல் வைரஸ் தகவல் காட்டிக் கொண்டிருப்பார் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

இங்கு நீங்கள் தரையிறக்கியவற்றில் ஒன்று  IDM 5.19  மற்றது   Patch 5.XX ஆகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். 

அடுத்து உங்கள் கணினியில் IDM 5.19   யை நிறுவிக்  கொள்ளுங்கள் பின்னர் கீழே காட்டப்பட்டுள்ளவாறு வழியுடாக நீங்கள் சென்று Patch 5.XX  Copy  பண்ணி   Paste  பண்ணவும்

C:Windows ==> Programme File ===> Internet Down Loard Manager ==> இங்கு நீங்கள் Patch 5.XX Copy பண்ணி Paste பண்ணவும். 

அடுத்த Patch 5.XX கிளிக் பண்ணவும்.

இப்போது உங்கள்   Cracker ஆகி உங்களுக்கு இயங்குவதற்கு தயாராகி இருக்கும் நீங்கள் இதனை இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திருப்தியான முறையில் Internet Expoler ல் பயன்படுத்த முடியும்.

நீங்கள் இணையத்தில் இருக்கும் போது அங்கு காணப்படும் வீடியோ மற்றும் ஓடோ பைல்களைக் கண்டவுடன் தரையிறக்குவதற்கு தயாராக இருக்கும் மேலும். மிக வேகமாக தரையிறக்கும் ஒரு மென்பொருளாகும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏனெனில் நான் பாவித்த அனுபவத்தில் கூறுகிறேன்.

2 comments:

Saturday, October 9, 2010

கணினியில் என்னென்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

தரவிறக்க சுட்டி

இத் தகவல் இணையத்தில் உலாவும் போது படித்து ரசித்தது.... 

0 comments:

Friday, September 24, 2010

விண்டோஸ்-7 தீர்வுகள்


http://techielobang.com/blog/wp-content/uploads/2009/05/windows_7_complete-guide_01.jpg
விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 


1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான்Problems Step Recorder  என்னும் வசதி. 
http://blogs.technet.com/blogfiles/technetczsk/WindowsLiveWriter/Windows7PSRProblemsstepsrecorder_93FD/clip_image010_150c0fe6-5436-4303-8bf0-393e1e88a3d9.gif
பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து, PSR என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record  என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL  பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம். 


2."சிடி'யில் இமேஜ்: 
http://www.thebuzzmedia.com/wp-content/uploads/2009/05/windows-7-iso-burn-image-to-disk-utility.png
 மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான்.
கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn  என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.


3. பிரச்னைகளைத் தீர்க்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’)  எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, 
http://www.istartedsomething.com/wp-content/uploads/2008/11/w7troubleshoot1.jpg
நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.


4. ஆபத்துக்கால "சிடி': நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc   எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். 


http://2.bp.blogspot.com/_H_mfjCLS1K0/SgoMMkuDO8I/AAAAAAAADUc/aCwf3hiUEYc/s400/Windows+7+Applocker.jpg
5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா? அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா? இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க,  AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC   என்ற புரோகிராமினை இயக்கி,  Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker  எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள். 


6. கூடுதலாக கணக்கிடும் வசதி: விண்டோஸ் 7தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன்  Mode   என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம். 


7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.   


8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து http://www.microsoft.com/windows/virtual-pc/download.aspx எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.


9.சகலமும் ரைட் கிளிக்:  இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள  எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder  போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா! அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம்.  பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். 


10. மாறும் வால் பேப்பர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும்,  ஒரு ஸ்லைட் ÷ஷாவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து,  Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.  பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில்   Shuffle   என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

0 comments:

Wednesday, September 22, 2010

கணனி பயன்படுத்தும் போது தெரிந்திருக்க வேண்டிவை

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ,  முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

http://i.treehugger.com/files/th_images/dell_computers.jpg1. இரண்டு கிளிக் (D/Click ):  
விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே,  இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க் தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் பாக்ஸில் கிளிக் செய்வதற்கோ  பயன்படுத்தக் கூடாது. இதனால் தளம் இரண்டு டேப்களில் திறக்கப்படும்; அல்லது உங்களுடைய ஆப்ஷன் இரண்டு முறை அனுப்பப்படும். சிலர், படிவங்களில் தகவல்களை நிரப்பிவிட்டு, இறுதியில் அதனை அனுப்பும் Submit  பட்டனில் இரண்டு முறை கிளிக் செய்வார்கள். இது இரண்டு விண்ணப்பங்களை அனுப்பிவிடும். எனவே எந்த இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டுமோ, அங்கு மட்டுமே இருமுறை கிளிக் செய்திட வேண்டும்.

2.சரியான சாய்வுக் கோடு (Slashbackward and forward): 
கம்ப்யூட்டர் குறியீடுகளில் முன் மற்றும் பின் சாய்வுக் கோடு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துவது, விரும்பும் செயல் பாட்டி னைத் தராது.  \ என்பது பின் சாய்வுக் கோடு(backward).   /என்பது முன் சாய்வுக் கோடு (forward). விண்டோஸ் இயக்கத்தில் உள்ள கோப்புகள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டி வழிகளை அமைக்கையில் பின் சாய்வுக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. E.g : - C:\Program Files\Whatever . 


3. பிழைச் செய்தி பதிவு:  
சிஸ்டம் இயங்குகையில் பல வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்பட்டு, இயக்கம் முடங்கிப் போகும். இந்த பிழைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படியாவது குறித்து வைக்க வேண்டும். அதனை செலக்ட் செய்து டெக்ஸ்ட் பைல் ஒன்றில் ஒட்டி வைக்கலாம். தேர்ந்தெடுக்க இயலாவிட்டால், அப்படியே இமேஜ் பைலாக சேவ் செய்து, பின்னர் அதனைப் பார்த்து மெசேஜ் என்னவென்று டைப் செய்து வைக்கலாம். இந்த பிழைக்கான தீர்வு காண முயற்சிக்கையில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இதனை அனுப்பிக் கேட்கலாம். அல்லது கூகுள் தேடலில் இதனை பேஸ்ட் செய்தால், இது போல பிரச்னை ஏற்பட்டவர்கள், அப்போது என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தினைப் பெறலாம்.


4. அழிந்த பைல் மீட்பு:  
கோப்பு ஒன்றை, கம்ப்யூட்டரில் இருந்து அழிக்கும் போது, அது அப்படியே அழிக்கப்படுவதில்லை. இந்த பைல் இங்கிருக்கிறது என்று கம்ப்யூட்டரின் சிபியுவிற்குச் சொல்லப்படும் இன்டெக்ஸ் குறியீடுதான் அழிக்கப்படுகிறது. இது அந்த பைல் இருக்கும் ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பின்னர் வேண்டும்போது மற்ற பைல்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற செய்தியைக் கம்ப்யூட்டருக்குத் தருகிறது. எனவே நாம் விரும்பாமல் ஏதேனும் பைல் ஒன்றை, ரீசைக்கிள் பின்னிலிருந்தும் எடுக்க முடியாத நிலையில் அழித்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அதனைப் பெறலாம். இதற்கு ரெகுவா  (Recuva)போன்ற பைல் மீட்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தவும். 


5. ஹார்ட் டிஸ்க்கை முழுமையாக அழிக்க:  
பயன்படுத்திய கம்ப்யூட்டரை மற்றவருக்குக் கொடுக்கிறீர்கள். அல்லது விற்கிறீர்கள். அப்போது ஹார்ட் டிஸ்க்கினை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பைல்களை அழித்துவிட்டுக் கொடுப்பதாக இருந்தால், முழுமையாக அவற்றை அழிக்க வேண்டும். ஏனென்றால், இதனைப் பெறும் மற்றவர்கள், அழிந்த பைல் மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் உங்களின் பெர்சனல் தகவல்களைப் பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளன.


6. தேவையற்ற  இன்ஸ்டால் : 
 ஏதேனும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும்போது, அது தரும் கூடுதல் வசதிகளை இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பின்னர் எப்போது வேண்டுமானாலும், அந்த புரோகிராம் தரும் தளம் சென்று, பதிந்து கொள்ளலாம். ஏனென்றால், கூடுதல் வசதிகள் ஒவ்வொரு முறையும் புரோகிராமுடன் இயங்கத் தொடங்குகையில், அவை தொடங்க அதிக நேரம் எடுப்பதுடன், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில், ராம் மெமரியில் அதிக இடம் எடுக்கும். எனவே அப்ளிகேஷன் சாப்ட்வேர்  ஒன்றை பதிந்து கொள்கையில், கூடுதல் வசதிக்கான செக் பாக்ஸ் மற்றும் ரேடியோ பட்டன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவற்றை நீக்கி இன்ஸ்டால் செய்திடவும்.


7. கிளீனர்களை நம்ப வேண்டாம்: 
 நாம் நம்பிக்கை வைத்திருக்கும் தளங்கள் சிலவற்றில், உங்கள் கம்ப்யூட்டரை சுத்தப்படுத்த, இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள் என சில லிங்க்குகள் இருக்கும். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்திடலாமே!  ஸ்பைவேர்களை எடுக்கவா, இலவசமாய்! என்று சில லிங்க்குகள் இருக்கும். பெரும்பாலான இந்த லிங்க்குகள் நமக்கு உதவி செய்வதைக் காட்டிலும், உபத்திரவம் தருவதாகவே அமையும். இக்கட்டில் மாட்டிவிட்டு, பணம் கட்டு என்று சொல்லும் தளங்களும் உள்ளன. ஆனாலும் CCleaner போன்ற இலவச software களை பாவிக்கலாம்.  இஸ்ருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதனை அறவே தவிர்த்தலே சிறந்தது.

8. தேவையற்றவற்றை நீக்குக:
http://media.dkszone.net/wp-content/uploads/2010/05/uninstall-program-windows-7_12_.jpg
 மிகவும் ஆசையாக சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பதிந்து பயன்படுத்தி இருப்பீர்கள். காலப் போக்கில் அதன் மேம்படுத்தப் பட்ட அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய சில சாப்ட்வேர்களையும் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இந்நிலையில், பழைய சாப்ட்வேர்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குவதே நல்லது. கண்ட்ரோல் பேனல் சென்று,  Add/Remove Programs பிரிவின் மூலம் பழையனவற்றை நீக்கிவிடுங்கள். 


9: சிந்திய திரவம்: 
http://www.laptop-computers.cn/laptop/laptop-computer.jpg
 லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே தண்ணீர், காபி, டீ என பானங்களைச் சாப்பிடுவார்கள். அப்படியே சில வேளைகளில் கவனமின்றி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது சிதறிவிடும். உடனே அதனை இணைத்திருக்கும் பவர் ப்ளக்கை நீக்கவும். பவர் ப்ளக்கில் இல்லை என்றால், கம்ப்யூட்டர் உள்ளே இருக்கும் பேட்டரியை நீக்க வேண்டும். இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும், வெப் கேமரா, யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள ட்ரைவ் போன்றவை, நீக்க வேண்டும். உடனே லேப்டாப்பினைத் தலைகீழாக கவிழ்த்து அந்த திரவத்தினை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டாம். நல்ல உறிஞ்சும் தன்மையுடைய துணி கொண்டு, ஒற்றி எடுக்க முயற்சிக்கலாம். லேப்டாப்பினை வெவ்வேறு திசைகளில் அசைப்பதன் மூலம், மேலே உள்ள திரவம் இன்னும் உள்ளே போகும் வழியை அமைக்காதீர்கள்.


10. அட்மின் அக்கவுண்ட்:  
பெரும்பாலான எக்ஸ்பி சிஸ்டம் பயனாளர்கள், அவர்களின் அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட்டிலேயே, தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணிபுரிவார்கள். கம்ப்யூட்டர்களில் மாற்றங்கள் ஏற்படுத்த, இந்த அக்கவுண்ட் வழி செல்ல வேண்டும் என்றாலும், மற்ற நேரங்களில் வேறு ஒரு அக்கவுண்ட் வழி சென்று பயன்படுத்தலாம். ஏனென்றால், அட்மின் அக்கவுண்ட் வைரஸ்களை எளிதில் உள்ளே வரவழைக்கும்.

11. சிஸ்டம் ட்ரே கிளீன்:  
உங்களுடைய டாஸ்க்பாரின் வலது பக்கம் சிஸ்டம் ட்ரேயில் பல ஐகான்கள் உள்ளனவா? இவை எல்லாம் உங்களைக் கேட்காமலேயே இயங்கிய புரோகிராம்களின் தடங்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இயக்கப்பட்டுப் பின்னணியில் இருக்கும். இங்கிருக்கும் புரோகிராம்கள் தேவையா என சிறிய கால இடைவெளியில் பார்த்துத் தேவைப்படாதவற்றை நீக்கவும். கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகவுள்ள Always show all icons and notifications on the taskbar என்ற பிரிவில்   செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதன் மூலம் உங்கள் சிஸ்டம் ட்ரே எவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று தெரியவரும். இதில் தேவைப்படாத ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Close என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அந்த குறிப்பிட்ட புரோகிராம், இயக்கத்தில் இருந்து நீக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.


12. மின் சிக்கனம்:
 லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பேட்டரியின் திறனைச் சற்று சிக்கனமாகப் பயன்படுத்தலாமே. இதற்கான Power Settingsஅமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள். கண்ட்ரோல் பேனலில்Power Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். உங்கள் லேப்டாப் பயன்பாட்டிற்கேற்ப, இதில் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.

0 comments: